திருப்பூரில் குரூப் 4 போட்டித் தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்பு
திருப்பூரில் குரூப் 4 போட்டி தேர்வுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் குரூப் 4 போட்டி தேர்வுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு துவங்கி நடைபெற்று வருகிறது - இப்பயிற்சியின் மூலம் கடந்த ஓராண்டில் 54 பேர் அரசு தேர்வில் வெற்றி பெற்றதாக அலுவலர் தகவல். தமிழகத்தில் காலியாக உள்ள 6244 பணியிடங்களை நிரப்பிடும் வகையில் குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது.
ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டி தேர்வுக்காக பயிற்சி பெற்ற வல்லுநர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 112 பேர் இதுவரை பயிற்சி பெற்று வருவதாகவும் வரும் நாட்களில் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் தெரிவித்தார்.
தேர்வுக்கு முன் 15 நாட்களுக்கு ஒரு முறை என மாதிரி தேர்வு நடத்தப்படும் எனவும் , இப்பயிற்சியின் மூலம் கடந்த ஓராண்டில் 54 பேர் அரசு தேர்வில் வெற்றி பெற்றதாகவும் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் உள்ள நூலகத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொடர்ந்து போட்டி தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.