போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் !

போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் !

பயிற்சி வகுப்புகள்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 (TNPSC GROUP 1) தேர்விற்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 15.04.2024 அன்று முதல் செவ்வாய் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநில அளவிலான மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2-Passport size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.

நமது தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2022 - 2023 ஆம் ஆண்டு வெளியான TNUSRB SI தேர்வில் 5 நபர்களும், TNUSRB PC தேர்வில் ௧௭ நபர்களும் தேர்ச்சிப் பெற்று தற்போது பணியில் உள்ளனர். மேலும் 2023 – 2024 ஆம் ஆண்டில் TNPSC GROUP IV தேர்வில் 22 நபர்களும், TNPSC GROUP II முதன்மை தேர்வில் 8 நபர்கள் இறுதி கலந்தாய்விற்கு தேர்வாகியுள்ளனர் . 2023-2024ஆம் ஆண்டில் TNUSRB SI தேர்வில் 5 நபர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். TNUSRB பிக் தேர்வில் 45 நபர்கள் உடற்தகுதி தேர்வுக்கு சென்று முடிவிற்காக காத்திருக்கின்றனர்.

மேலும் http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவ்விணையதளத்தில் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம், மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி தேர்வினை ஆன்லைனில் எழுதலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story