போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட ஆட்சியர்

வேலூரில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப்-1 தேர்விற்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 1-க்கான முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. இங்கு அதிக அளவில் பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரிதேர்வுகளும் நடத்தப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். இப்பயிற்சி வகுப்புகளில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெறலாம் என வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story