காகித கூழ் பிரிவில் இலவச தொழில் கல்வி பட்டய படிப்பு
தொழில் கல்வி
கரூர் மாவட்டம், புகலூர், டி என் பி எல் செய்தித்தாள் காகித ஆலையின், சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ், ஆலையை சுற்றி அமைத்துள்ள புகலூர் நகராட்சி, புஞ்சை தோட்ட குறிச்சி பேரூராட்சி, நஞ்சை புகழூர், புன்னம், கோம்பபாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளிலும், திருச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் 5- பேருக்கு காகித கூழ் பட்டய படிப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றும்,1-06-24 அன்று 18 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அந்தத் தேர்வில் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு திருச்சிராப்பள்ளி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகித கூழ் பிரிவில் 3 1/2 ஆண்டுகள் இலவச கல்வி கற்றுத் தரப்படும். மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம், தேர்வு கட்டணம் ஆகியவை காகித நிறுவனத்தால் கல்லூரிக்கு செலுத்தப்படும்.
பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை கரூர், புகலூர், திருச்சி மொண்டிபட்டி ஆலைகளின் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூன் 10க்குள் அலுவலங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.