இலவச சர்க்கரை நோய் மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்வு!
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் மற்றும் பப்ளிக் பவுண்டேஷன் சார்பில் இலவச சர்க்கரை நோய் மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் மற்றும் பப்ளிக் பவுண்டேஷன் சார்பில் இலவச சர்க்கரை நோய் மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்வு மாரத்தான் முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கலந்து கொண்டு பயனடைந்தனர். இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் தீமை குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மருத்துவர்கள் துரை நாகரத்தினம், பிரசாந்த் ஆகியோர் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். மாரத்தான் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம், பிருந்தாவனம், பால் பண்ணை வழியாக மீண்டும் விளையாட்டு திடலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story