இலவச கண் மருத்துவ முகாம்
Free camp
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள ஜீவா செட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குமாரபாளையம் ரோட்டரி சங்கம் தமிழக ஹையர், கூட்ஸ் ஓனர் அசோசியன் , அரவிந்த் கண் மருத்துவமனை சேலம் சார்பில் நெசவாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நிகழ்வினை தனியார் திருமண மண்டபம் உரிமையாளர் முகுந்த நாராயணன், ராகம் ஏ.பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர் . இதில் கண் புரை கண் நீர் அழுத்த நோய், சர்க்கரை நோய் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு முகாம் நடக்கும் இடத்திலேயே குறைவான விலையில் கண்ணாடி வழங்கப்பட்டது
. சிறப்பு அழைப்பாளர்களாக குமாரபாளையம் ரோட்டரி சங்க நிர்வாகிகளான சந்திரன், கார்த்திகேயன், மூர்த்தி, சித்தேஸ்வரன், கருணாகரன், ஆடியோ மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமின் மூலமாக பயன் அடைந்தனர்.