இலவச கண் பரிசோதனை முகாம் - நகர் மன்ற தலைவர் துவக்கி வைப்பு

இலவச கண் பரிசோதனை முகாம் - நகர் மன்ற தலைவர் துவக்கி வைப்பு
X

கண் சிகிச்சை முகாம் 

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை இந்திரா நகரில் உள்ள ஏஎஸ்பி மஹாலில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறியவர் முதல் பெரியார் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்பந்தப்பட்ட இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யப்பட்டன‌. இதில் நகர் மன்ற உறுப்பினர் ஜெய்காந்தன், மதியழகன், வண்ணாம்மாள் சரவணன், திமுக இளைஞரணி பெருப்பாளர் ஹரிகரன், தகவல் தொழில்நுட்பம் சதீஸ் உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story