டிஎம்பி வங்கி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

டிஎம்பி வங்கி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

இலவச கண் சிகிச்சை முகாம்

கயத்தாறில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பாபா நேசனல் மெட்ரிக்குலேஷன் ஆங்கிலப் பள்ளியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பவுண்டேஷன் அதிகாரி சௌந்தர பாண்டியன் மற்றும் கயத்தாறு கிளை மேலாளர் மகாலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

பாபா மெட்ரிகுலேஷன் பள்ளியின் இயக்குனர் வீரபாண்டியன் முகாமை தொடங்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் வீ.வீரம்மா, எஸ்.கல்யாணி ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் அரவிந்த் கண் மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர், கந்தசாமி, நேசனல் பள்ளி தாளாளர் சர்மிளா பாண்டு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story