உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம் - இலவச தலைகவசம் வழங்கிய எம்எல்ஏ

உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம் - இலவச தலைகவசம் வழங்கிய எம்எல்ஏ

திமுக சார்பில் இலவச தலைகவசம் எம்எல்ஏ மதியழகன் வழங்கினார்

திமுக சார்பில் இலவச தலைகவசம் எம்எல்ஏ மதியழகன் வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 250 நபர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ,மதியழகன் வழங்கினார்.இந்நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., இருசக்கர வாகன ஓட்டிகள் 250 பேருக்கு தலா ரூ.900 மதிப்புள்ள தலைகவசத்தை வழங்கினார். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்கிட வேண்டும். குறிப்பாக தலைகவசம் அணியாமல் வாகனங்கள் இயக்க கூடாது.

பெரும்பாலான சாலை விபத்துகளில் உயிரிழப்புகளுக்கு தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதே காரணமாக அமைகிறது. எனவே, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலை விதிகளை பின்பற்றி, தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தலைக்கவசம் வழங்கப்பட்டதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சுகவனம், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், சுப்பிரமணி, அறிஞர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் சந்தோஷ், மதன்குமார், மதியழகன், இளைஞரணி துணை அமைப்பாளர் விசிஎன் மகேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story