வெள்ளப்பெருக்கால் வீடு இழந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா

வெள்ளப்பெருக்கால் வீடு இழந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா

இலவச வீட்டுமனை பட்டா 

கிள்ளியூரில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீட்டை இழந்த 3 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து பெய்த கன மழையால், ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால் கடந்த 15ம் தேதி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட வைக்கலூர், கணியன்குழி, ஈழக்குடி விளாகம் பகுதிகளில் உள்ள புருஷோத்தமன், சுனில்குமார், சுமா தேவி ஆகிய மூன்று பேரின் வீடுகள் தாமிரபரணி ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த உடன் சம்பவ இடத்திற்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் , பத்மநாபபுரம் கோட்டாட்சியர் கெளசிக் ஆகியோர் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக அரசின் சார்பில் நிலமும், வீடு கட்டுவதற்கான உதவிகளும் அரசிடம் இருந்து உடனடியாக பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து மூன்று குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டாவை நேற்று வழங்கினார்கள். மேலும் இவர்கள் வீடு கட்டுவதற்கு வசதியாக ராஜேஷ்குமார் எம். எல்.ஏ சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மூன்று குடும்பங்களுக்கும் வழங்கினார். மேலும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வைக்கலூர், கணியன்குழி பகுதிகளில் உடனடியாக பாதுகாப்பு சுவர் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 10 லட்சமும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 15 - லட்சமும், கொல்லங்கோடு நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 10 - லட்சமும் என மொத்தம் ரூ. 35 - லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். என தெரிவித்தார்.






Tags

Next Story