குமரியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

குமரியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

வருவாய்துறை சார்பில் அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு எம்.பி., கனிமொழி தலைமையில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.  

வருவாய்துறை சார்பில் அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு எம்.பி., கனிமொழி தலைமையில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்துறையின் சார்பில் அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தேரேகால்புதூர் ஊராட்சிக்குட்பட்ட, கங்கா கிரான்டியூர் திருமண மண்டப அரங்கில் நடைபெற்ற. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார் . இவ்விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.

இதில் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட 1920 பயனாளிகளில் 36 பயனாளிகளுக்கு நத்தம் நிலுவை இனங்கள் பட்டாவும், 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 1669 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலன் இ - பட்டாவும், 194 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலன் இ - பட்டாவும், 20 பயனாளிகளுக்கு சுனாமி வீட்டுமனை பட்டாவும், தோவாளை வட்டத்திற்குட்பட்ட 2181 பயனாளிகளில் 24 பயனாளிகளுக்கு நத்தம் நிலுவை இனங்கள் பட்டாவும், 1814 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலன் இ- பட்டாவும், 343 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலன் இ- பட்டா என மொத்தம் 4101 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப் பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story