இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம், பல்லக்காபாளையம் ஊராட்சியில் உள்ள ஆயகவுண்டம்பாளையம் ,வஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் கிராம நத்தா புறம்போக்கு பகுதியில், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் அருந்ததியர் மக்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மேலும் இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி பல்லக்கா பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து மனுவும் வழங்கப்பட்டன.இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனும் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருந்த நிலையில் , கடந்த 23-ஆம் தேதி திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு 1370 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் ஒரு பகுதியாக வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த அபிநயா, சண்முகம் உள்ளிட்ட 15 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான சான்றிதழ் வனத்துறை அமைச்சர் கையால் வழங்கப்பட்டது.

இது அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் காரணமாக கிடைக்கப் பெற்றதாகும் .. . தொடர்ந்து விண்ணப்பத்துள்ள அனைவருக்கும், வீட்டுமனை பட்டா கிடைப்பதற்கான அடுத்தகட்ட போராட்டங்கள் மேற்கொள்ள உள்ளதாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.துரைசாமி , ஒன்றிய பொருளாளர் கோவிந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சின்னத்தாயி, சித்ரா, ரேவதி உள்ளிட்டோர் தெரிவித்தனர் .

மேலும் வீட்டுமனை பட்டா கிடைக்கப் பெற்ற 15 நபர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்துக்கு தங்கள் நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்....

Tags

Next Story