இலவச பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

இலவச பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

பட்டா மாறுதல் முகாம்

நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் இலவச பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் இலவச பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஏரல் வட்டம், நாசரேத் கிராமத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி தலைமை தாங்கி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். திருச்செந்தூர் வட்டாட்சியர் குருசந்திரன் முகாம் நடக்கும் இடத்தை பார்வையிட்டார்.

முகாமில் வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம், வருவாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மு

காமில் துணை தாசில்தார் ஜானகி, ஆழ்வார்திருநகரி வருவாய் ஆய்வாளர் மகாதேவன், நாசரேத் நகர பஞ்சாயத்து தலைவர் நிர்மலா ரவி, முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் ரவி செல்வக்குமார், நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் முத்துமாலை, நாசரேத் தலையாரி கண்ணன் மற்றும் சுற்று வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 202 மனுக்கள் பெறப்பட்டன.

Tags

Next Story