புதுக்கோட்டையில் இலவச தற்காப்பு கலை பயிற்சி: சான்றிதழ்கள் வழங்கல்
விழாவில் கலந்து கொண்டவர்கள்
இலவச தற்காப்பு கலை பயிற்சி நிறைவு நாளன்று பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நேரு யுவ கேந்திரா மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் ரோட்டரி சங்கங்கள் புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை புத்தாஸ் வீர கலைகள் கழகம் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி இணைந்து புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள ஸம்ஸ்க்ருத ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த பத்து நாட்களாக தற்காப்பு கலையான கராத்தே சிலம்பம் உள்ளிட்ட மாஸ்டர் கார்த்திகேயன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
குத்துச்சண்டை மாவட்ட கழக தலைவர் தொழிலதிபர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் தலைமையில் நடந்த நிறைவு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ராஜ்குமார் விஜயகுமார் தொண்டைமான் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் நகர மன்ற தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயம் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
மாணவர்களுடைய தற்காப்பு கலையான கராத்தே சிலம்பம் உள்ளிட்டவைகளை மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் செய்து காண்பித்தனர் நிகழ்ச்சியின் முன்பு இயற்கை விவசாயி நம்மாழ்வார் திருவுருவப்படத்திற்கு மரம் ராஜா ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினார்கள்.