இலவச பொது மருத்துவ முகாம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலி்ன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வருகிற 10ம் தேதி இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலி்ன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வருகிற 10ஆம் தேதி மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க, மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை மற்றும் சென்னை கற்பகவிநாயகா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. இம்முகாமானது வருகிற 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தூத்துக்குடி 2 – ம் கேட் அருகிலுள்ள S.A.V ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.
மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பில் நடைபெறும் முகாமில் இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இ.சி.ஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்ட்ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்படும். மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், குழந்தைகளுக்கான இருதய மருத்துவம், பெண்கள் மற்றும் மகப்பேறு நல மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், எலும்பு & மூட்டு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம் ஆகியவற்றிற்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.