திருப்பூர் சூசையாபுரம் பகுதியில் இலவச மருத்துவ முகாம்.
திருப்பூர் மாநகராட்சி 36 வது வார்டு சூசையாபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை , கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மேலும் திருப்பூர் மாநகராட்சி தூய்மை பணியாளருக்கான சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், சர்க்கரை நோய், புற்றுநோய், பல் மருத்துவம், காசநோய், காது மூக்கு தொண்டை மருத்துவம், குடும்ப நல சிகிச்சை மற்றும் ஆலோசனை, பால்வினை நோய் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவம் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், கண் சிகிச்சை, தோல் மருத்துவம்,
இசிஜி பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டு பால் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், திமுக தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜ், 36 - வது வார்டு கவுன்சிலர் திவாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.