திருப்போரூர் வட்டத்தில் இலவச மருத்துவ முகாம்

திருப்போரூர் வட்டத்தில் இலவச மருத்துவ முகாம்
திருப்போரூர் வட்டத்தில் இலவச மருத்துவ முகாம்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட திருப்போரூர் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது
மிக்ஜாம் புயலால், திருப்போரூர் உள்ளிட்ட வட்டங்களில், சாலைகள் சேதம், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள், ஏரி உடைப்பு, வாகனங்கள் பழுது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிப்புகளை சீரமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை, அந்தந்த துறை சார்ந்த பணியாளர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், குப்பை கழிவுகளை அகற்றுதல், பிளீச்சிங் பவுடர் துாவுதல் போன்ற சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர, நடமாடும் வாகனத்தின் வாயிலாக, சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ரத்த அழுத்தம், காய்ச்சல் போன்ற பரிசோதனைகள் செய்து, மருந்து, மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் பெற்றுச்சென்றனர்

Tags

Next Story