திருப்பூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
இந்தியாவில் ஒன்றரை லட்சம் பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர், இந்தியாவில் 25 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என திருப்பூரில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்,மருத்துவர்கள் பேட்டி. உலக மகளிர் தினத்தை முன்னிட்டுதிருப்பூர் குமார் நகரில் உள்ள திருப்பூர் ரேவதி மருத்துவமனை வளாகத்தில் சென்னை சிம்ஸ் மருத்துவமனை, ரோட்டரி பிரைம்,திருப்பூர் ரேவதி மருத்துவமனை, மற்றும் திருப்பூர் ரோட்டரி அமைப்புகளுடன் இணைந்து கல்லீரல் பரிசோதனை, பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய்நோய் மருத்துவ பரிசோதனை, ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இந்த மகளிர் காண கர்ப்பப்பை உள்ளிட்ட புற்றுநோய் மருத்துவ பரிசோதனைகள், கல்லீரல் மருத்துவ முகாமில் 7999 ரூபாய் மதிப்பிலான கல்லீரல் மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன,இந்த மருத்துவ முகாமில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு, மார்பக புற்றுநோய், தொப்பை பாதிப்பு, மஞ்சள் காமாலை உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக மருத்துவபரிசோதனைகள்,ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்துஇந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்ட சிறப்பு மருத்துவர்கள் மருத்துவர்கள் விவேகானந்தன், சரவணன்,ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது கடந்த மூன்று நாட்களாக 8 ரோட்டரி அமைப்புகள் இணைந்து கல்லீரல் பரிசோதனை, பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய் மருத்துவ பரிசோதனை, ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் 300 நபர்களுக்கு 7999 ரூபாய் மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன, கல்லீரல் பாதிப்பு தற்போது அதிக அளவில் காணப்படுகிறது, இந்தியாவில் ஒன்றரை லட்சம் பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர், இந்தியாவில் 25 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.கல்லீரல் பாதிப்பிற்கு முக்கிய மூன்று காரணங்களில் உள்ளன, மதுபானங்கள் எளிதாக கிடைப்பதால் அதனை சிறுவயதிலேயே மதுபானங்களை குடிப்பதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது 30 வயதில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உடல் ஆரோக்கியத்தை இழக்கின்றனர், குடும்பத்தை கவனிக்க முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது, குறிப்பாக 10 நோயாளிகளில் 7 நோயாளிகள் மதுபானங்கள் எடுத்துக்கொண்ட கல்லீரல் பாதிப்பு தான் அதிகமாக காணப்படுகிறது. ஆகவே மதுபானங்களை குடிப்பதை குறைத்துக் கொண்டாலே பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம், இந்த மதுபானங்கள் குடிப்பதால் கல்லீரல் பாதிப்பு மட்டும் ஏற்படுவதில்லை மாறாக தலை முதல் கால் வரை புற்றுநோய் பாதிப்பு,சாலையில் விபத்துகள் ஏற்படுகின்றன, காமத்தினால் விபரீதங்கள் ஏற்படுகின்றன,பணப் பிரச்சனை சமூக பிரச்சனை ஆகியவை இந்த மதுபானங்கள் குடிப்பதால் ஏற்படுகிறது.
மதுபானங்கள் குடிப்பதை குறைத்துக் கொண்டால் மட்டுமே எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்,25 சதவீத மக்கள் கல்லீரலில் கொழுப்பு படிந்து நோய் பாதிப்பு காணப்படுகிறது,இதனை எளிதாக தவிர்க்கலாம் மதுபானங்கள் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும், உடற்பயிற்சி அவசியம் , மஞ்சள் காமாலை பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும், இரண்டில் இருந்து மூன்று சதவீத மக்களுக்கு வைரஸ் கிருமி உள்ளது,இந்தக் கிருமி இருப்பதே தெரியாது,கல்லீரல் 50 சதவீத பாதிப்புக்கு பின்னரே இது தெரிய வரும்,இதனை தடுப்பு ஊசி மூலம் தடுக்க முடியும்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என தெரிவித்தனர்.