மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் இலவச மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்


உச்சநீதிமன்றம் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டபணிகள் புதுடெல்லி ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியும்மாகிய பல்கீஸ் ஆலோசனைபடி "தேசிய சட்ட பணிகள் தினத்தை" முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழுவின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கீஸ் , குடும்புநல மாவட்ட நீதிபதி தனசேகரன், தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி மூர்த்தி, , சார்பு நீதிபதி அண்ணாமலை, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி, , குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் சுப்புலட்சுமி, சங்கீதாசேகர், ஆகியோரும் இம்முகாமில் கலந்துகொண்டனர். இதில் வழக்கறிஞர்கள்
அசோசியேஷன் சங்கதலைவர் திருமணிவண்ணன் உட்பட அனைத்து வழக்கறிஞர்களும், நீதிமன்ற பணியாளர்களும் மற்றும் பொதுமக்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனை பெற்று பயன்டைந்தனர்.இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியும் ஆகிய சந்திர சேகர் செய்திருந்தார்.



