விநாயகா மிஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம்

விநாயகா மிஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் 

இதய சிகிச்சை தொழிற்நுட்பவியலாளர் தினத்தை முன்னிட்டு சேலம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆட்டையாம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதய சிகிச்சை தொழிற்நுட்பவியலாளர் தினமானது ஆண்டுேதாறும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இதய சிகிச்சை தொழில்நுட்ப பிரிவானது, சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. முகாமிற்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் கொண்டலாம்பட்டி பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தி மற்றும் பேரூராட்சி தலைவர் முருகபிரகாஷ் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

கவுன்சிலர் கலைமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, சப்-இ்ன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். முன்னதாக துறை மாணவர்கள் ஆட்டையாம்பட்டி பஸ் நிலைய பகுதியில் இதய நோய், குறிப்பாக மாரடைப்பு ஏற்படும் நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள், முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து மவுனமொழி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து ெபாதுமக்களுக்கு இலவச இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தேவைப்படுவோருக்கு மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை துறையின் பொறுப்பாளர் சுஸ்மிதா, உதவி பேராசிரியர்கள் தாமினி, சிவரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story