ராம்கோ சிமெண்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
இலவச மருத்துவமனை முகாம்
ராம்கோ சிமெண்ட் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனர் ராமசாமி ராஜாவின் 130-வது பிறந்த தினத்தையொட்டி சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, அம்மாபேட்டை திரு நரம்பியல் மருத்துவமனையுடன் இணைந்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம், பொது மருத்துவ முகாம் நடந்தது.
ராம்கோ நிறுவன துணைத்தலைவர் துரைசிங்கராஜா தலைமை தாங்கினார். பணியாளர்துறை மேலாளர் மணிவேல் வரவேற்றார். வாழப்பாடி வட்டார அட்மா குழு தலைவர் சக்கரவர்த்தி, ராம்கோ கணக்குத்துறை மேலாளர் சுரேஷ்குமார், தலைமை ஆசிரியை சத்தியகுமாரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் 180 பேர் கண் பரிசோதனை, 320 பேர் முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.
Next Story