இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.


மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
சேலம் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை மற்றும் அரூர் கவண் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் அரூர் கவண் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக கண் மற்றும் மூட்டு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், அதிநவீன முறையில் குறைந்த கட்டணத்தில் கண்புரை அறுவை சிகிச்சை, தூரப்பார்வை, கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இதுதவிர, கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, கண் நீர் அழுத்த பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகளும், மூட்டு தேய்மானம், தீராத மூட்டு வலி, மூட்டு மாற்று சிகிச்சை, மூட்டு நுண்துளை சிகிச்சையும், இலவசமாக எக்ஸ்-ரே, பி.எம்.டி. சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story