தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

X
மருத்துவ முகாம்
குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தார். இதில் நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் 288 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் ரத்த கொதிப்பு, ரத்த வகை கண்டறிதல், ஈ.சி.ஜி, சர்க்கரை அளவு பார்த்தல், கண் பார்வை பரிசோதனை, உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags
Next Story
