ஷாவ்லின் ஆதிசக்தி டிரஸ்ட் சார்பில் இலவச தியான சிகிச்சை முகாம்

தியான சிகிச்சை முகாம்
ஷாவ்லின் ஆதிசக்தி டிரஸ்ட் சார்பில் இலவச தியான சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமில் மூட்டு வலிகள், சர்க்கரை வியாதி, மன அழுத்தம், உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், தூக்கமின்மை, நெஞ்சடைப்பு, அடிக்கடி வரும் மயக்கநிலை, உடல் சோர்வு, மனசோர்வு உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு தியானத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து ஷாவ்லின் ஆதிசக்தி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி மற்றும் சிகிச்சையாளர் சங்கத்தின் தலைவர் ரமேஷ் கூறுகையில், மனிதனுக்கு ஏற்படுகின்ற பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் இல்லாமல் இயற்கையான முறையில் தியானத்தின் மூலம் நோய்களை நிவர்த்தி செய்யப்படுவதாகவும். வாரம் ஒரு நாள் என தொடர்ந்து 5 வாரம் தியான பயிற்சி மூலம் சிகிச்சை பெற்றால் நோயின் தன்மை முழுமையாக தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் 20 ஆண்டுகளாக தொடர் தியானத்தில் இருந்த சிறந்த வல்லுநர்களை கொண்டு மக்களுக்கு இலவசமான முறையில் பொதுமக்களை தொடாமல் தியானத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த முகாம் நடைபெற்று வருவதாகவும் இந்த முகாமின் மூலம் சுமார் ஒரு லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
