திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை, துளசி பார்மசி இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் வளாகத்தில் நடந்தது.
மாவட்ட நீதிபதி கே.பாபு மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா, நீதிபதிகள் சிவகுமார், பாலாஜி ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர். முகாமில் கண் நீர் அழுத்த பரிசோதனை, கம்ப்யூட்டர் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், துணை தலைவர் சசிகுமார், செயலாளர் பி. வி. வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்படுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் செய்திருந்தார்.

Tags

Next Story