எடப்பாடி பகுதி பனை தொழிலாளர்களுக்கு இலவச பனைத் தொழில் உபகரணங்கள்

எடப்பாடி பகுதி பனை தொழிலாளர்களுக்கு இலவச பனைத் தொழில் உபகரணங்கள்

காதி கிராம தொழில் ஆணையம் சார்பில் எடப்பாடி பகுதி பனை தொழிலாளர்களுக்கு இலவச பனைத் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காதி கிராம தொழில் ஆணையம் சார்பில் எடப்பாடி பகுதி பனை தொழிலாளர்களுக்கு இலவச பனைத் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காதி கிராம தொழில் ஆணையம் சார்பில் எடப்பாடி பகுதி பனை தொழிலாளர்களுக்கு இலவச பனைத் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி காதி கிராம தொழில் ஆணையம் சார்பில் எடப்பாடி பகுதி பனைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் இலவச பனை பொருள் உற்பத்தி கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது... கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியாக, கருத்தரங்கு மற்றும் சிறப்பு பயிற்சி முகாமில்,சேலம் மாவட்ட காதி கிராம தொழில் ஆணைய மேலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில இயக்குனர் சுரேஷ்,ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பானை தொழிலாளர்களுக்கு, ரூபாய் 20000 மதிப்புள்ள உபகரணங்கள் 20 நபர்களுக்கு இலவச பனை பொருள் உற்பத்தி கருவிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பனைத் தொழிலாளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கில் உதவி இயக்குனர் வாசிராஜன் பேசுகையில் பனை பொருள் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து பனைத் தொழிலாளர்களுக்கு விளக்கி கூறினார். மேலும் அலுவலர்கள் மற்றும் பனை தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story