விலையில்லா செயற்கை கால், கை வழங்கும் விழா!

இராசிபுரம் அரிமா சங்கம் ஜீவன் ஜோதி டிரஸ்ட் ஈரோடு இணைந்து விலையில்லா செயற்கை கால், கை வழங்கும் விழா நடைபெற்றது.
இராசிபுரம் அரிமா சங்கம் ஜீவன் ஜோதி டிரஸ்ட் ஈரோடு இணைந்து விலையில்லா செயற்கை கால், கை வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 13 லட்சம் மதிப்பிலான செயற்கை கை மற்றும் கால்களை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக அமைச்சர் மற்றும் எம்பி வழகினார்கள். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரிமா சங்க திருமண மண்டபம் (சுமங்கலி மஹால்), தனியார் திருமண மண்டபத்தில் இராசிபுரம் அரிமா சங்கம் ஜீவன் ஜோதி டிரஸ்ட் ஈரோடு இணைந்து விலையில்லா செயற்கை கால், கை வழங்கும் விழா தொண்டு நிறுவனம் சார்பில் கை மற்றும் கால்களை இழந்தவர்களுக்கு, செயற்கை கை மற்றும் கால் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரிமா.S.அரங்கசாமி MJF தலைவர் தலைமை வகித்தார். அரிமா. T.R. தமிழ்மணி PMJF மாவட்ட ஆளுநர் ஷியாம்சுந்தர் புத்ரா, சேர்மன், ஜீவன் ஜோதி டிராஸ்ட் ஹன்ஸ்ராஜ் புத்ரா, செயலாளர், ஜீவன் ஜோதி டிராஸ்ட் அரிமா. V.P. சுப்ரமணியம், MJF செயலாளர், இராசிபுரம் அரிமா சங்கம். அரிமா. N. முருகேசன், MJF செயலாளர், இராசிபுரம் அரிமா சங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் உள்ளிட்டோர் முகாமை தொடங்கி வைத்து கை கால்களை இழந்த 63 நபர்களுக்கு 13 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை இலவசமாக வழங்கினார். இதில் 53 கால்கள்,10 கைகளும் வழங்கப்பட்டது. விழாவில் அரிமா சங்க தலைவர் ரங்கசாமி மற்றும் அரிமா. R. மனோகரன் MJF பொருளாளர், நன்றியுரை ஆற்றினார். செயலாளர் லயன் வி.பி.சுப்ரமணியம் மற்றும் முருகேசன், பொருளாளர் லயன் ஆர். மனோகரன், வட்டாரத் தலைவர் லயன் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் மாதேஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர் இராகவன், ராஜமாணிக்கம், வைத்தியலிங்கம், தமிழரசன், சக்திதாஸ், கணேசன், பாலகிருஷ்ணன் மற்றும் மேற்பார்வையாளர்கள், சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story