இலவச பொது மருத்துவ முகாம்

இலவச பொது மருத்துவ முகாம்

அ.தி.மு.க. சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் 

அ.தி.மு.க. சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே புன்னப்பட்டி ஊராட்சி வேலாயுதம்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமை நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நத்தம் அருகே குள்ளப்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தொடங்கி வைத்தார்.

Tags

Next Story