இந்தியன் வங்கி சார்பில் இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி

இந்தியன் வங்கி சார்பில் இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி

சுயவேலைவாய்ப்பு பயிற்சி

இந்தியன் வங்கி சார்பில் இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி விண்ணப்பிக்க 30-ந் தேதி கடைசிநாள்.
சேலத்தில் மத்திய அரசு ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் வழிகாட்டுதலுடன் கொண்டலாம்பட்டியில் இயங்கி வரும் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சிசிடிவி கேமரா பயிற்சி (13 நாட்கள்), அழகு கலை பயிற்சி (30 நாட்கள்), சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி (13 நாட்கள்) இலவசமாக நடத்தப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவுடன் சுயமாக தொழில் செய்து அதிக வருமானம் சம்பாதிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தொழில் தொடங்க வங்கியில் கடன் பெறுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு வயது வரம்பு 19 முதல் 45 வரை மட்டும். ஆர்வமுள்ள கிராமப்புற பகுதியை சேர்ந்த, தொழில்முனைவோர் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை இவற்றின் நகலுடன் வருகிற 30-ந் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு பயிற்சி கட்டணம் இல்லை. பயிற்சி பொருட்கள், நோட்டு, புத்தகங்கள் தேனீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள கிராமப்புற பகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண் தொழில்முனைவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் லாலி காயத்ரி கேட்டு்க்கொண்டுள்ளார்.

Tags

Next Story