ஆறுதல் பவுண்டேஷனில் இலவச தையல் பயிற்சி துவக்கம்
துவக்க விழா
வையப்பமலையில் செயல்படும் மத்திய அரசின் இலவச திறன் பயிற்சி மையத்தில் எஸ்.சி., பிரிவை சேர்ந்த மகளிருக்கு தையல்பயிற்சி துவக்கவிழா நடந்தது.
நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த மகளிரை சுயதொழில் முனைவராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகார பரவல் அமைச்சகத்தின்கீழ், நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில் செயல்படும் ஆறுதல் பவுண்டேசன் இலவச திறன்பயிற்சி மையத்தில் நேற்று, எஸ்.சி.,பட்டியலினத்திற்குட்பட்ட ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் அனைத்து எஸ்.சி., பிரிவை சேர்ந்த 18முதல் 45வயதுள்ள மகளிருக்கு 5மாதகால பயிற்சியான இலவச தையல்பயிற்சி துவங்கப்பட்டது.
மேலாளர் பூபதிமுருகன் தலைமை தாங்கினார். நிர்வாகி பத்மபிரியா வரவேற்புரையாற்றினார். எலச்சிபாளையம் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் கெளதமன், குப்பிச்சிபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் செந்தில்குமார், தொண்டிப்பட்டி ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.