திருப்பூரில் இலவச டேக்வாண்டோ பயிற்சி முகாம்

திருப்பூரில் இலவச டேக்வாண்டோ பயிற்சி முகாம்

கோப்பு படம் 

திருப்பூரில் இலவச டேக்வாண்டோ பயிற்சி முகாம் 18-ந் தேதி தொடங்குகிறது.

திருப்பூரில் இலவச டேக்வாண்டோ பயிற்சி முகாம் 18- ந் தேதி தொடங்குகிறது. திருப்பூர் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் கோடைகால இலவச டேக்வாண்டோ சிறப்பு பயிற்சி முகாம் வருகிற 18-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நெசவாளர் காலனி,

கண்ணகி நகர் தமிழ்நாடு கிராம வங்கி கட்டிடத்தில் மேல் தளத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என இருவரும் பங்கேற்கலாம். தலைமைபயிற்சியாளர் ஆபிரகாம் லிங்கன் தலைமையில் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற சிறந்த வீரர் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முகாமில் உடற்பயிற்சி வகுப்பு ,சத்தான உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வுமனதைஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளுடன் தற்காப்பு கலை பயிற்சிகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story