மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்

திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி திருச்செந்தூர் யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் யூனியன் தலைவர் செல்வி வடமலைபாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 21 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச 3 சக்கர மோட்டார் சைக்கிள்களை வழங்கினார்.

பின்னர் நடுநாலுமூலைக்கிணற்றில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொதுநிதியில் இருந்து ரூ.42 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், திருச்செந்தூர் யூனியன் வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளான மெடோனா தெரு, சாந்திநகர், பாத்திமாநகர், சிங்காரவேலர் குடியிருப்பு, சவேரியார்தெரு, செந்தில்வீதி, ராஜ்கண்ணாநகர், குறிஞ்சிநகர், வேளாங்கண்ணிமாதா கோவில் தெரு உள்ளிட்ட 37 இடங்களில் ரூ.1.88 கோடி மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. மெடோனா தெருவில் நடந்த இந்த பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் தொடக்க விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சி பகுதிகளில் பொது நிதியில் இருந்து குடிநீர் குழாய் விஸ்தரிப்பு, பேவர் பிளாக் ரோடு, கான்கிரீட் ரோடு, புதிய போர்வெல் அமைத்தல், மீன் வலை கூடம் அமைத்தல், மீன் ஏலக்கூடம் அமைத்தல் உட்பட 42 பணிகள் ரூ.1 கோடியே 20 லட்சத்து 17 ஆயிரம் நிதியில் திட்டமிடப்பட்டது. இப்பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மீராசிராசுதீன், ஊராட்சி தலைவர்கள் பாலமுருகன், கிருபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உடன்குடி யூனியன் ஆணையாளர் ஜான்சி ராணி வரவேற்றார். இதில் மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், இஸ்ரோ தாசில்தார் கோபாலகிருஷ்ணன், மாநில தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story