அறிவுசார் மையத்தில் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்பு துவக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் மாணவ மாணவிகளை டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயார் படுத்தும் வகையில் சந்தைப்பேட்டை பகுதியில் நகராட்சி சார்பாக அறிவு சார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் யூபிஎஸ்சி தேர்வுகளுக்கும் மாணவ மாணவிகளை தயார் படுத்தும் விதமாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன,
திருச்செங்கோடு நகராட்சியும் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களும் இணைந்து வருகின்ற 2024 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக கிராம நிர்வாக அலுவலர் உதவி அலுவலர் மற்றும் இதர காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட 6224 இடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன இந்த போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக பிரிதி வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகளை திருச்செங்கோடு நகராட்சியும் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களும் இணைந்து மாணவ மாணவிகளுக்கு வழங்குகின்றனர்,
இதில் பங்கேற்று பயிற்சி எடுப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் இந்த போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இன்று திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார் வெவ்வேறு போட்டி தேர்வு நிறுவனங்களில் இருந்தும் பயிற்சியாளர்கள் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர் .
இது தொடர்பாக நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு கூறும்போது டி என் பி எஸ் சி மற்றும் யுபிஎஸ்சி தேர்வுகளில் இந்த பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பயிற்சி மையத்திலிருந்து தேர்வு பெற்றால் அது எங்களது வெற்றியாக நாங்கள் கருதுவோம் என்று கூறினார் போட்டி தேர்வுகள் முடியும் வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன அதனை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது