நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்புகள் மண்புழு உரம் தயாரிப்பு

நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்புகள் மண்புழு உரம் தயாரிப்பு

உரம் தயாரிப்பு 

மண்புழு உரம் தயாரித்தில் குறித்து, நாமக்கல்லில் வரும் மே 23ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய (KVK) தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற மே 23ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு , ஊட்டமேற்றிய மட்கும் உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடைபெறும்.

இப்பயிற்சியில் எளிதில் மட்கக்கூடிய கழிவுகளின் வகைகள், எளிதில் மட்கச்செய்ய தேவைப்படும் பொருட்களின் வகைகள், மண்புழு வகைகள், மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், ஊட்டமேற்றுதல், ஊட்டமேற்றிய உரம் மண்ணிலிடுவதால் மண்வளம் மற்றும் பயிர் வளர்ச்சியில ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெளிவாக விளக்கவுரையும், செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.

பயிற்சியில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளாலம். விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேளாண் அறிவியில் நிலையத்தை 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ள வேண்டும்.

பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story