விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி இலவச பயிற்சி

விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி இலவச பயிற்சி
X
வேளாண்மை அறிவியல் மையம்
விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கான இலவச பயிற்சி நடந்தது.

சேலம் சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தோட்டக்கலை பயிர்களில் நாற்றங்கால் மேலாண்மை மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி குறித்த ஒருநாள் இலவச பயிற்சி நடக்கிறது.

பழப்பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்கள் நாற்று உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலில் காய்கறிகள் மற்றும் மலர் பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சி கொடுக்கப்பட உள்ளது.

ஆர்வமுள்ள விவசாயிகள் பண்ணை மகளிர் படித்த வேலையில்லா இளைஞர்கள் ஆகியோர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story