நாமக்கல்லில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி இலவச பயிற்சி

நாமக்கல்லில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி குறித்து, இன்று 29 ஆம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் மோகனூர் ரோட்டில், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே), நாளை 29ம் தேதி, காலை 10 மணிக்கு, இயற்கை முறையில் தக்காளி, வெண்டை மற்றும் கத்தரி சாகுபடி முறைகள் குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மண் மற்றும் நீர் மாதிரி பரிசோதனையின் முக்கியத்துவம், அவை சேகரிக்கும் முறைகள், இயற்கை முறையில் மண்வள மேம்பாடு, இயற்கை முறையில் வளர்ச்சியூக்கி தெளித்தல், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள் குறித்து தெளிவாக விளக்கவுரையும், செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.

இந்த பயிற்சியில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், முன்பதிவு செய்து கொள்ள 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை அணுக வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story