பெண்களுக்கு இலவச பரிசோதனை முகாம் !
முகாம்
சேலம் சண்முகா மருத்துவமனையில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சேலம் சாரதா கல்லூரி ரோட்டில் உள்ள சண்முகா மருத்துவமனையின் 42-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மட்டும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு, சண்முகா மருத்துவமனை முதன்மை தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மருத்துவமனை நிர்வாக முதன்மை இயக்குனர் டாக்டர் பிரபு சங்கர், மருத்துவ சேவையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்ட புற்றுநோய் ஆராய்ச்சிக்கான முதல் மருத்துவமனை சண்முகா மருத்துவமனை ஆகும் தற்போது இந்த மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட சிறந்த அனுபவம் வாய்ந்த டாக்டர்களை கொண்டு சேவையாற்றி வருகிறோம். இதில் பெண்களின் நலன் கருதி இலவசமாக மார்பக புற்றுநோய், வயிற்று புற்றுநோய், பொது மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்படும். மேலும் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகளுக்கு சிறப்பு சலுகையாக 1,500 ரூபாய் மட்டும் செலுத்தி சிகிச்சை பெறலாம். இந்த சலுகை கடந்த 1-ந் தேதி முதல் இந்த மாதம் முழுவதும் அதாவது வருகிற 31-ந் தேதி வரை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த முகாமில் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரியதர்ஷினி, மகப்பேறு டாக்டர் சிந்து ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்தனர். மருத்துவ குழுவினர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் முருகவேல் நன்றி கூறினார்.
Next Story