விடுதலைப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா

கொண்டமநாயக்கன்பட்டி விடுதலைப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விடுதலைப் போராட்டத்தில் தனது நாடகங்களின் மூலம் மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தி நாடக மேடையிலேயே உயிர் நீத்த தியாகி விசுவநாததாஸின் 128 வது பிறந்தநாள் ஆண்டிபட்டி அருகே கொண்ட மநாயக்கன்பட்டியில் மருத்துவ குல சங்கத்தினர் சார்பாக கொண்டாடப்பட்டது விழாவில் ஓய்வுபெற்ற தீயணைப்புத்துறை அதிகாரி கணேசன் தலைமையில் மருத்துவகுல சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் விசுவநாததாஸின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி கோசங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினர் இதையடுத்து விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கும் சாலையில் சென்ற பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன

Tags

Next Story