உத்திரமேரூரில்  அடிக்கடி  மின் தடை

உத்திரமேரூரில்  அடிக்கடி  மின் தடை

பைல் படம் 

உத்திரமேரூரில் சில தினங்களாக முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில், 40,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், உத்திரமேரூரில் சில தினங்களாக முன் அறிவிப்பின்றி, அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர். உத்திரமேரூர் பகுதியினர் கூறியதாவது: சில தினங்களாக, வெயிலின் தாக்கத்தால், வீடுகளில் புழுக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உத்திரமேரூர் நகரில், ஒரு நாளைக்கு 3- - 4 முறை, உத்திரமேரூர் பகுதியில் மின் தடை ஏற்படுகிறது. இதனால், மின்விசிறியை இயக்க முடியாததால், புழுக்கத்தால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பகல் மற்றும் இரவு நேரங்களில் அவதிக்குள்ளாகின்றனர். வீட்டு உபயோகத்திற்கும், மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, தடையின்றி மின்சாரம் வழங்க, உத்தரமேரூர் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்."

Tags

Next Story