காங்கேயத்தில் மின்சாரம் தாக்கி புதுப்பெண் பலி

காங்கேயத்தில் மின்சாரம் தாக்கி புதுப்பெண் பலி

பலியான புதுப்பெண்

காங்கேயம் மூர்த்தி ரெட்டி பாளையத்தில் மின்சாரம் தாக்கி திருமணமான மூன்று மாத புது பெண் பலியானர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதிக்குட்பட்ட மூர்த்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரவி வயது 43. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு விமல் என்கிற மகனும், நிவேதா என்ற மகளும் இருந்தனர். நிவேதா வயது 20 என்பவர் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியை சேர்ந்த விஜய் என்பவரது மகன் பிரகலாதன் என்பவரை காதலித்து பிரகலாதன் குடும்பத்தினருடைய சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் வீட்டில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது வெகு நேரமாகியும் குளிக்க சென்ற நிவேதா வெளியே‌ வராததால் கணவர் பிரகலாதன் மற்றும் அவரது குடும்பத்தினரும் பாத்ரூம் கதவை தட்டியுள்ளனர். ஆனால் எந்தவொரு சத்தமும் வராததால் கணவர் பிரகலாதன் பாத்ரூமின் மேற்பட்ட சிமெண்ட் அட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த மனைவி நிவேதாவை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் காங்கேயம் போலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் பாத்ரூமில் இருந்த மின்சார ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கியதில் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Tags

Next Story