‘கோவிந்தா’ முழக்கத்துடன் பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்

‘கோவிந்தா’ முழக்கத்துடன் பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்

திருவண்ணாமலையிலிருந்து ‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

திருவண்ணாமலையிலிருந்து ‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

திருவண்ணாமலை பகுதியில் இருந்து 15 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மல மஞ்சனூர் புதூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இது பழமையான கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பின் போது சுற்று புற பகுதி கிராம மக்கள் ஒன்று கூடி மாலை அணிந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்கின்றனர் சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு அந்த கோவிலில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக புறப்படுபவர்.

அதேபோல் இந்த வருடமும் நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மலமஞ்சனூர், தானிப்பாடி, சின்னையம்பேட்டை, ரெட்டியார் பாளையம், கீரனூர், வேப்பூர், செக்கடி, தேவரடியார் குப்பம், உடையார் குப்பம், விஜய்யப்பனூர், டி வேலூர், மோட்டூர், பக்கிரி பாளையம், விருப்பாச்சி, கொளமஞ்சனூர், கல்நாட்டூர், ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் ஸ்ரீதேவி பூதேவி சீனிவாச பெருமாள் கோயிலில் மாலை அணிந்து சிறப்பு பூஜைகள் செய்த பிறகு திருப்பதிக்கு பாதயாத்திரை ஆக புறப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் ஏழுமலை, சேகர் மற்றும் ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமியர்களும் மஞ்சள் ஆடை அணிந்து தங்களது பொருட்களை சுமந்து கொண்டு ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் திருப்பதிக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர்.

பலர் தங்களது பிள்ளைகளை தோளில் சுமந்தும் நடந்து சென்றனர். இந்தப் பாதை யாத்திரை குறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணன் தெரிவிக்கையில், இந்த உலகத்திற்கு குருவாக பாரத தேசம் திகழவும், கொரோனா போன்ற நோய்கள் முழுமையாக ஒழியவும், உலக நன்மைக்காகவும், இந்த கிராம மக்களின் நன்மைக்காகவும், திருப்பதிக்கு ஒவ்வொரு வருடமும் பாதயாத்திரை மேற்கொள்கிறோம் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து இருபத்தி நான்கு வருடங்களாக பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கூறுகையில், திருப்பதிக்கு யாத்திரையாக சென்று வேண்டினால் தான் எங்களுக்கெல்லாம் மன நிம்மதி கிடைக்கிறது. இந்த கிராமமும் செழிப்படையும். மக்களுக்கும் எந்தவிதமான இன்னல்கள் இன்றியும் இருக்கிறோம். இதை கண்கூடாக பார்த்து வருகிறோம் என தெரிவித்தனர். இந்த பாதயாத்திரை குழுவினர் திருவண்ணாமலை, போளூர், வேலூர் வழியாக திருப்பதிக்கு 300 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை ஆக சென்று 3800 படிகளை ஏறி வைகுண்ட ஏகாதேசி அன்று வெங்கடேச பெருமாளை தரிசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story