காந்தி நகரில் கணவன் இறந்ததால் விரக்தி அடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

காந்தி நகரில் கணவன் இறந்ததால் விரக்தி அடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மறைந்த கதிர்வேல் மனைவி ரம்யா வயது 27. இவரது கணவர் கதிர்வேல் கடந்த 4- வருடங்களுக்கு முன்பு திடீரென காலமானார். தனக்கான துணை காலமானதை தொடர்ந்து விரக்தியான மன நிலையில் வாழ்ந்து வந்தார் ரம்யா. இதன் காரணமாக மே 30ஆம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த ரம்யாவின் தாயார் வீரம்மாள் வயது 47 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ரம்யாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story