ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவசம்
தர்மபுரியில் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை பின்பற்றியவர்களுக்கு முழு உடல் பரிசோதனைக்கான இலவசம் கூப்பன்கள் வழங்கப்பட்டன.
தர்மபுரி போக்குவரத்து போலீசார், குளோபல் தீவிர சிகிச்சை மருத்துவமனை மற்றும் சமூக விழிப்புணர்வாளர்கள் சார்பில் 4 ரோடு வழியாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை கடைபிடித்து சென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு முழு உடல் பரிசோதனையை குளோபல் தீவிர சிகிச்சை மருத்துவமனையில் இலவசமாக செய்து கொள்ள கூப்பன் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி போக்குவரத்து காவல்துறையினர் அலுவலர் சின்னசாமி குளோபல் தீவிர சிகிச்சை மருத்துவர் ராமநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story