திருட்டை தடுக்க போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு: வணிகர் சங்க பேரமைப்பு

திருட்டை தடுக்க போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு: வணிகர் சங்க பேரமைப்பு

ஜெயக்குமார் வெள்ளையன்

திருட்டை தடுக்க போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வணிகர் சங்க பேரமைப்பு வணிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாமக்கல் நகரில் கோட்டை ரோடு மற்றும் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள மொபைல் போன் கடைக்குள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த வடமாநில கொள்ளையர்கள், ரூ. 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 61 மொபைல் போன்களை திருடி சென்றனர். இச்சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த நிலையில், மாவட்டத்தில் திருட்டை தடுக்க அனைவரும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் திருட்டை தடுக்க வணிகர்கள், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும், பாதுகாப்பு கருதி, கதவுகளுக்கு 3 பூட்டுகளை பயன்படுத்த வேண்டும். அதில், சென்ட்ரல் லாக் மிக அவசியம். எக்காரணம் கொண்டும் கடைகளுக்குள் பணத்தை வைத்து செல்லவேண்டாம். அதிகப்படியான சரக்குகளை வைத்துள்ள வணிக நிறுவன உரிமையாளர்கள், தங்களது கடைகளுக்கு, இரவு காவலர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு முடியாத சிறு வணிகர்கள், கூட்டாக இணைந்து இரவு காவலர்களை நியமிக்க வேண்டும். முடிந்தவரை, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் தென்பட்டால், உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளித்து, தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story