மோடிக்கு இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு

மோடிக்கு இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு

இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.


இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தெலுங்கானா ஆளுனருமான தமிழிசை சௌந்தர்ராஜன் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்த் விமானம் மூலம் கோவை வந்தார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு முன் ஆளுநராக உங்களை சந்தித்துள்ளேன் இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது எனவும் இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும் என்ற அவர் அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. வாக்களிப்பதற்கான அனைத்து ஆவணங்கள் இருந்த போதும் அவர்களது பெயர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து இருக்க வேண்டும் எனவும் மாநகராட்சி பணியாளர்களுக்கு இந்த பணிகளை வழங்கியதால் தான் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது என்றார்.இதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் ஒருவரின் வாக்களிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு இருக்கக் கூடாது என்றார். பிரதமர் அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார் எனவும் 10 கோடி நபர்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியவர் இதில் குறிப்பிட்ட சதவீதம் இஸ்லாமிய மக்கள் பயனடைந்துள்ளனர் எனவும் அதேபோல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய மக்களும் பலனடைந்துள்ளனர் என்ற அவர் எந்தவித மத பாகுபாடும் இன்றி அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக மோடி முன்வைத்து வருகிறார் என்றார். காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் மற்றும் வறுமையில் உள்ள மக்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதி வருவதாகவும் 2006 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பேசியபோது நாட்டின் சொத்துக்கள் சிறுபான்மையினரின் உரிமை எனக் கூறினார் இப்படி பேசியதை தவிர அவர்களுக்கான முன்னேற்றங்கள் எதையும் காங்கிரஸ் கட்சியினர் செய்யவில்லை என்றார். இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளதாகவும் முத்தலாக் சட்டம் கொண்டு வந்து பெண்களுக்கு பிரதமர் சுதந்திரம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.பெண்ணுரிமை குறித்து பேசி வரும் ஸ்டாலின் இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை ஆனால் பிரதமர் மோடி விசா நடவடிக்கைகளை தளர்த்தி இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்வதற்கு வழிவகை செய்துள்ளார் என்றார். அலிகார் பல்கலைக்கழகத்தில் இதுவரை இஸ்லாமிய துணைவேந்தர் என யாரும் இல்லாத நிலையில் தற்போது பெண் ஒருவர் நியமனம் செய்யபட்டு உள்ளதாகவும் அந்த வகையில் நாட்டின் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை மோடி முன்னெடுத்து வருகிறார் என்ற அவர் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.நாட்டின் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களிடம் சென்று விடக்கூடாது என மோடி பேசியதாகவும் இதனை சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி என காங்கிரஸ் பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும் பிரதமர் மோடி ஆட்சியில் 25 கோடி ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது எனவும் கரோனா காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளே தடுமாறிய போது அந்த சூழ்நிலையை சமாளித்து இலவசமாக தடுப்பூசி வழங்கி லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளதாக கூறினார்.

வாக்காளர் பட்டியலில் மொத்தமாக வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை எனவும் ஜனநாயக உரிமை பறிக்கப்படும் போது அவர்கள் ஏன் குரல் எழுப்பவில்லை? என்ற கேள்வி எழுகிறது என்றவர் இந்த குழப்பங்களுக்கே அவர்கள் தான் காரணம் எனவும் சந்தேகபடுவதாக கூறினார்.தோல்வி பயத்தால் பாஜக இந்த கருத்தினை முன் வைப்பதாக கூறப்படுவது தவறானது எனவும் நான் உட்பட பாஜக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவோம் என்றவர் ஜனநாயக உரிமை பறிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுப்பது அவசியமாகும். இதில் தோல்வி பயம் எதுவும் இல்லை என்றார்.பிரதமர் களத்தில் நின்று மக்களுக்காக பேசி வருவதாகவும் அதுவே ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு பயணம் செய்து கொண்டிருப்பதாகவும் அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை என்றவர் திமுகவின் முன்னாள் அமைச்சர் இலாக்கா இல்லாமல் சிறையில் உள்ளார் எனவும் இரண்டு முதல்வர்கள் சிறையில் உள்ளனர். இது தான் இந்தியா கூட்டணியின் நிலை என்றார்.ஸ்டாலின் வடநாட்டிற்கு சென்றால் இந்தி எதிர்ப்பு,சனாதனம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அங்கு செல்லவில்லை என்றவர் திமுகவில் உதயநிதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உழைக்கும் கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை என்றார்.

பாஜகவில் மட்டுமே யார் வேண்டுமானாலும் தலைவர், ஆளுனராக எந்த பாகுபாடும் இன்றி ஆக முடியும் என்றார். தமிழ்நாட்டில் தான் மற்றொரு மொழியை கற்பதற்கு தடை உள்ளதாகவும் நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த போது ஏன் முதல் கையெழுத்திட்டு அதை நீக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீது பிரதமரும் பாஜகவினரும் மிகுந்த அன்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story