குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி - மாற்றுத்திறனாளி பெற்றோர் கோரிக்கை
கிருத்திகாஸ்ரீயுடன் முருகசாமி-அபிராமி தம்பதி
பெண் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்க மாற்றுத்திறனாளி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெற்றோர்களான முருகசாமி-அபிராமி தம்பதியினரின் 8 வயதுடைய பெண் குழந்தை கிருத்திஸ்ரீ-க்கு பிறவி குறைபாடு நோயாக ஸ்கோலியோசிஸ் எனப்படும் முதுகுத்தண்டுவட பிரச்சனையால் அவதிப்படும் சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கா 6 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை ஆகும் என்பதால் தமிழகஅரசு மற்றும் தன்னார்வலர்கள், அறக்கட்டளை நிர்வாகம் உள்ளிட்டோர் உதவி புரிய வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். தனது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story