விபத்தில் இறந்த கிரேன் ஆப்ரேட்டர் குடும்பத்திற்கு நிதியுதவி!

தூத்துக்குடியில் சாலை விபத்தில் இறந்த கிரேன் ஆப்ரேட்டர் குடும்பத்திற்கு நலச்சங்கம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மேலத்தட்டப்பாறையை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முனியசாமி (35). கிரேன் ஆப்ரேட்டரான இவர் கடந்த நவ.8ஆம் தேதி சாலை விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி தூத்துக்குடி கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்கம் & கிரேன் ஆப்ரேட்டர்கள் சார்பில் ரூ.77 ஆயிரம் நிதியுதவி அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சிம்பு கண்ணன், சுயம்புலிங்கம், செல்வக்குமார், சுமன், பார்த்திபன், மதியழகன், கோரம்பள்ளம் குமார், செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story