காட்பாடி ரயில் நிலைய மேம்பாட்டு பணி விரைவில் துவக்கம்

காட்பாடி ரயில் நிலைய மேம்பாட்டு பணி விரைவில் துவக்கம்

சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத்

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் விரைவில் துவக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் தெரிவித்தார்.
சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் சென்னையிலிருந்து தனி ஆய்வு ரயில் மூலம் வந்து நேற்று வேலூர் மாவட்டம் லத்தேரி காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதை அமைப்பு பணிகளை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரயில் தண்டவாளங்களுக்கு கீழே இணைக்கப்படுகின்ற ஸ்லீப்பர் கட்டை மாற்றும் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் காட்பாடி ரயில் நிலையம் முழுதும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு மூடப்பட்டு இருக்கின்ற கழிவறைகள், மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் , மற்றும் டிக்கெட் வழங்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு ரயில் பயணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் காட்பாடி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் துவங்கும். மேலும் தமிழக அரசின் சார்பாக புதிதாக கட்டப்பட இருக்கும், காட்பாடி இரண்டாவது ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும் இருப்பு பாதைகளுக்கு இடையேயான பாலத்திற்கான பில்லர் அமைக்கும் பணிகள் முறையாகவும், ரயில் போக்குவரத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது வகையில் மிகவும் பாதுகாப்புடன் கட்டப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் தமிழக அரசின் சாலைகளை இணைத்துக் கொள்வார்கள். என்று தெரிவித்தார் . காட்பாடி ரயில் நிலையத்தில் தற்போது மூடப்பட்டு இருக்கின்ற கழிவறைகள் அனைத்தும் சரி செய்யப்படும் மக்களின் வசதிக்கேற்ப அவை மாற்றி அமைக்கப்படும். என்றும் தெரிவித்தார். ஆய்வின்போது கூடுதல் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தேஜ் பிரதாப் சிங் மற்றும் கூடுதல் முதுநிலை கோட்ட போக்குவரத்து மேலாளர் செல்வின் மற்றும் காட்பாடி ரயில் நிலைய மேலாளர் ஜெயசெல்வன் உட்பட ரயில்வே துறை அதிகாரிகள் அனைவரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story