கேலோ- இந்தியா விழிப்புணர்வு மாரத்தான்

கேலோ- இந்தியா விழிப்புணர்வு மாரத்தான்

மாரத்தான் 

கேலோ-இந்தியா விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரத்தில் காவல் துறையினரின் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, விளம்பர ஊர்தி மற்றும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடைபெற்றது.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதைக் கருத்தில் கொண்டு 06.01.2024 விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரால் கேண்டர் (டார்ச்) (Canter) சுற்றுப்பயணம் துவக்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட பாதை மற்றும் காலம் ஆகியவற்றில் பயணித்து மீண்டும் சென்னையை சென்றடையும்.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு திறந்த வெளி மைதானத்திலிருந்து கேண்டர் (டார்ச்) (Canter) சுற்றுப்பயணம் காஞ்சிபுரம் நகரை சுற்றி விளம்பரப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான காவல் துறையினரின் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, விளம்பர ஊர்தி மற்றும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து காலை துவக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள்-2023 முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் ஜெயசித்ரா, பயிற்றுநர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story