ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்

ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்

ஈரோட்டிலுள்ள ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம் நடத்தப்பட்டது.


ஈரோட்டிலுள்ள ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம் நடத்தப்பட்டது.
ஈரோடு மாநகரில் மேட்டூர் சாலையில் அபிராமி தியேட்டர் கடந்த 1985ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த தியேட்டர் ஈரோடு மக்களுக்காக திருப்பூர் சக்தி சினிமாஸ் உடன் இணைந்து ஸ்ரீ சக்தி அபிராமி சினிமாஸ் என்ற புதிய பெயரில், பல்வேறு சிறப்பம் சங்களுடன் புதிய பொலிவுடன் செயல்பட உள்ளது. இந்நிலையில், அபிராமி தியேட்டரின் 39ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி தியேட்டரில் கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் தலைமையில் கணபதி யாகம் நடைபெற்றது. அபிராமி தியேட்டர் சேர்மேன் என்.எஸ்.எஸ். செந்தில் நாதன், நிர்வாக இயக்குநர்கள் புனிதா, அண்ணாமலை, ஸ்ரீ சக்தி அபிராமி சினிமாஸ் நிர்வாக இயக்குநர்கள் கார்த்திக், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த யாகத்தில் தியேட்டர் நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அபிராமி தியேட்டர் சேர்மேன் செந்தில்நாதன் கூறியதாவது: அபிராமி தியேட்டர் மக்களின் பேராதரவுடன் கடந்த 39 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஈரோடு மக்களுக்காக ஸ்ரீ சக்தி அபிராமி சினிமாஸ் என பெயரில், 7 ஸ்கிரின்(தியேட்டர்) கொண்ட தியேட்டராக புதிய பொலிவுடன் விரைவில் செயல்பட உள்ளது. தியேட்டரில் பார்வையாளர் களான மக்களுக்கு பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் ஏற்படுத்தியுள்ளோம். குறிப்பாக சுமார் 300 நான்கு சக்கர வாகனங்கள்(கார்கள்) நிறுத்துவதற்கு என தியேட்டர் வளாகத்திலேயே புதிய பார்க்கிங் வசதி, 7 தியேட்டர்களிலும் நவீன ஏசி வசதி, இருக்கை வசதிகள், பால்கனிக்கு கூடுதல் வசதி போன்றவை ஏற்படுத்தியுள்ளோம். விரைவில் தியேட்டர் திறப்பு விழா செய்யப்பட்டு, திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

Tags

Next Story